Home விளையாட்டு கேப்டன் பாபர் அசாமுக்கு ஆங்கிலம் தெரியாது

கேப்டன் பாபர் அசாமுக்கு ஆங்கிலம் தெரியாது

by Jey

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாமுக்கு ஆங்கிலம் தெரியாது, அவருக்கு தகவல் தொடர்பு திறன் இல்லை, அதனால் தான் அவரால் பிராண்ட் ஆக முடியவில்லை என கடந்த காலங்களில் கருத்து தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் தற்போது சோயப் அக்தர் கேப்டன் பதவி என்பது ஐசிசி விருதுகளை வெல்வது அல்ல என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் (பிஎஸ்எல்) பாபரை விட சிறப்பாக விளையாடி வரும் அசம்கான், எதிர்காலத்தில் பாகிஸ்தானின் கேப்டனாகும் தகுதிகளை கொண்டவர் என்று அவர் கூறினார்.

24 வயதான அசம்கான் உள்நாட்டு கிரிக்கெட்டில் தூள் கிளப்புகிறார். பாகிஸ்தான் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மொயின் கானின் மகன் தான் இவர்.

தந்தை மாதிரி ஆசாமும் ஒரு விக்கெட் கீப்பர் மற்றும் பேட்டர். பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்காக விளையாடி வரும் அசம்கானை அக்தர் பாராட்டினார்.

டிவி விவாதம் ஒன்றில் கலந்து கொண்ட அவர் கூறியதாவது:- அசம் கானை பார்த்தபோது அவர் மிகவும் பொறுப்பான நபராகத் தெரிந்தார். விளையாட்டில் மட்டுமல்ல, அவர் பேசிய விதம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்தது. அவர் தனது திறமை குறித்து பேசிய விதம் அனைவரையும் கவர்ந்தது.

20 ஆண்டுகளுக்கு முன்பு நான் கிரிக்கெட் விளையாடும்போது எந்தப் பேட்டியிலும் நான் சொல்ல விரும்புவதைச் சொல்வேன். ஆனால் இப்போது அப்படியில்லை. இன்றைய காலகட்டத்தில் ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

நான் யாரையாவது சுட்டிக்காட்டி பேசவில்லை. ஊடகங்கள் முன் பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவர் (பாபரைக் குறிப்பிட்டு) கேப்டன் என்பதால் மீடியாக்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும்..” என்றார். கேப்டன் என்பது ஐசிசி விருதுகளை வெல்வது மட்டுமல்ல. அணியை நடத்தும் தலைவராக வேண்டும்.

என கேலி செய்துள்ளார். கடந்த ஆண்டு சொந்த மண்ணில், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் தோல்வியடைந்தது, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் தோல்வியடைந்தது, ஆசிய கோப்பை இறுதிப் போட்டி மற்றும் 20 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் தோல்வியடைந்தது. இதனால் அவர் பாபரை கேலி செய்வதில் அக்தர் முன்னணியில் இருந்தார். அக்தர் பாபரை விமர்சிக்கும் எந்த வாய்ப்பையும் தவறவிடுவதில்லை.

related posts