பிரித்தானியாவில கொவிட் தடுப்பூசியின் இரணடாம் டோஸ் மக்களுக்கு வழங்கப்பட்டதன் பின்னர் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
தற்போது இந்தியாவில் வேகமாக பரவும் வைரஸ் வகை மற்றும் பிரிட்டனில் காணப்படும் வகையை எதிர்ப்பதில் இரண்டு டோஸ் தடுப்பூசி பயனுள்ளதாக இருக்கிறது” என பிரிட்டன் சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இங்கிலாந்து பொது சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்திருப்பதாவது: பைசர் பயோடெக் தடுப்பூசியின் 2-ம் டோஸை எடுத்துக்கொண்ட இரு வாரங்களுக்கு பின்னர், பி.1.617.2 வகைக்கு (இந்தியாவில் அதிகம் பரவியுள்ள வகை) எதிராக அத்தடுப்பூசி 88% செயல்படுகிறது. அதுவே பிரிட்டனில் பரவிய பி.1.1.7 வகைக்கு எதிராக 93% செயல்திறன் கொண்டிருக்கிறது.
அஸ்ட்ராசெனகா தடுப்பூசி (கோவிஷீல்ட்) இந்தியாவில் பரவியுள்ள வகைக்கு எதிராக 60% செயல்படுகிறது. பிரிட்டனில் பரவியுள்ள வகைக்கு எதிராக 66% செயல்திறன் பெற்றுள்ளது. என சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், பைசர் மற்றும் கோவிஷீல்டின் முதல் தடுப்பூசி போட்ட 3 வாரங்களுக்கு பின்னர் இந்தியாவில் பரவியுள்ள வைரஸ் வகை தாக்கினால் 33% செயல்திறன் இருக்கும், பிரிட்டன் வகை வைரஸ் என்றால் 50% செயல்திறன் இருக்கும் என கூறியுள்ளனர். இம்முடிவுகளுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரிட்டன் சுகாதார செயலர் மட் ஹன்காக், திட்டத்தின் சரியான பாதையில் செல்கிறோம் என நம்பிக்கை தெரிவித்தார். இரண்டு டோஸ் எடுத்த பிறகு தடுப்பூசி திறம்பட செயல்படுகிறது என்பதை இந்த தரவுகள் காட்டுவதாக கூறினார்.
இதன் காரணமாக விரைவில் பிரிட்டன்வாசிகளுக்கு 2-ம் கட்ட தடுப்பூசியை போட்டுவிட்டு, ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த திட்டமிட்டுள்ளனர். ஆனால் இந்தியாவிலோ தரமான தடுப்பூசியை இலவசமாக தந்தாலும் வதந்திகளின் காரணமாக மக்கள் உயிரை பணயம் வைத்துக்கொண்டுள்ளனர்.