Home இலங்கை கேகாலையில் மாவட்டத்தில் ஐந்து பேருக்கு மரண தண்டனை

கேகாலையில் மாவட்டத்தில் ஐந்து பேருக்கு மரண தண்டனை

by Jey

கேகாலையில் மாவட்டத்தில் இடம்பெற்ற கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களாக குற்றஞ்சாட்டப்பட்ட ஐந்து பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் (08.03.2023) கேகாலை- மேல் நீதிமன்ற நீதிபதி ஜயகி டி அல்விஸ் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூலை 3 ஆம் திகதி கேகாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெவலகம – கஹகல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற விருந்தின் போது,

சீமெந்து கல்லினால் தாக்கி நபர் ஒருவரைக் கொன்றதாகக் குற்றம் சுமத்தப்பட்ட ஐவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

related posts