Home கனடா கூடுதல் லாபம் ஈட்டவில்லை என மளிகை கடை நிறுவனங்கள் அறிவித்துள்ளன

கூடுதல் லாபம் ஈட்டவில்லை என மளிகை கடை நிறுவனங்கள் அறிவித்துள்ளன

by Jey

கனடாவில் பண வீக்கத்தை பயன்படுத்தி கூடுதல் லாபம் ஈட்டப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் எவ்வித உண்மையும் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் முதல் நிலை மளிகை கடை நிறுவனங்கள் இந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ளன.

குறிப்பாக கனடாவின் மெட்ரோ, லாப்லோ மற்றும் எம்பயார் ஆகிய மூன்று மளிகைகடை நிறுவனங்களும் இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளன.

இந்த நிறுவனங்களின் பிரதம நிறைவேற்ற அதிகாரிகள் அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

இதன்போது பண வீக்கத்தை பயன்படுத்தி நிறுவனங்கள் உணவுப் பொருட்களில் கூடுதல் லாபம் ஈட்டுவதாக சுமத்திய குற்றச்சாட்டுகளை அந்தந்த நிறுவனங்கள் நிராகரித்துள்ளன.

மிகக் குறுகிய அளவிலான லாபமே ஈட்டப்படுவதாக அந்த நிறுவனங்கள் சுட்டிக்காட்டி உள்ளன.

உலக அளவில் உணவுப் பொருட்களுக்கு நிலவிவரும் விலை அதிகரிப்பு விநியோக சங்கிலியில் காணப்படும் தாமதம் போன்ற பல ஏதுக்களினால் இவ்வாறு உணவு பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாகவும் தமது நிறுவனங்கள் அதீத லாபத்தை ஈட்டவில்லை எனவும் நிறுவனங்கள் சுட்டிக்காட்டி உள்ளன.

related posts