இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது அதி சொகுசு பயணிகள் கப்பலான ‘பிரின்சஸ் குரூஸ்’ கப்பல்
”பிரின்சஸ் குரூஸ்” அமெரிக்க நிறுவனத்திற்கு சொந்தமான 294 மீட்டர் நீளமுள்ள அதி சொகுசு பயணிகள் கப்பலாகும்.
இந்த கப்பல் 1,894 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 906 பணியாளர்களுடன் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
159 சுற்றுலாப் பயணிகள் கொழும்பு துறைமுகத்தில் இறங்கியுள்ளதுடன் அவர்கள் கண்டி, பின்னவல, நீர்கொழும்பு மற்றும் இங்கிரிய ஆகிய பகுதிகளுக்குச் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, குறித்த கப்பல் இன்று இரவு துபாய் துறைமுகத்திற்கு புறப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன