கனடியவால் அநேகருக்கு பிரதமர் ஜஸ்டின் டுடேவின் சம்பளம் பற்றிய விபரங்கள் தெரியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் ஆய்வு நிறுவனம் ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பில் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.
சுமார் 1000 கணேரியர்களிடம் இணைய வழியில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது/
இதன் போது கனடிய பிரதமரின் சரியான சம்பளத்தை அனேகமானவர்கள் தெரிந்து வைத்திருக்கவில்லை என கண்டறியப்பட்டுள்ளது.
பிரதமர் ட்ரூடோ மூன்று லட்சம் முதல் 4 லட்சம் வரையில் சம்பளம் ஈட்டுகின்றார் என 18 விதமானவர்கள் தெரிவித்திருந்தனர்.
உண்மையில் பிரதமரின் வருடாந்த சம்பளம் 379000 டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து கணிப்பில் பங்கேற்ற 42 விதமானவர்கள் பிரதமரின் சம்பளம் 3 லட்சம் டாலர்களையும் விட குறைவானது என கருத்து வெளியிட்டுள்ளனர்
இதேவேளை பிரதமருக்கு வழங்கப்படும் சம்பளம் அதிக அளவிலானது என மானிடோபா மற்றும் சஸ்கட்ச்வான் மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.