டொரன்டோ மிருக காட்சி சாலையின் ஒரு பகுதி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டொரன்டோ மிருக காட்சி சாலையில் பறவைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பகுதியே இவ்வாறு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பறவை காய்ச்சல் அபாயம் காரணமாக இந்த எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மிருகக்காட்சி சாலை அமைந்துள்ள இடத்திலிருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் காணப்படும் பண்ணையொன்றில் பறவை காய்ச்சல் நோய் பரவியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதன் காரணமாக முன்னெச்சரிக்கை அடிப்படையில் மிருக காட்சி சாலையின் பறவைகள் காட்சி கூட மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பறவைகளை பராமரிப்பு செய்யும் பணியாளர்களுக்கும் விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி இன்று முதல் டொரன்டோ மிருக காட்சி சாலையின் பறவைகள் காட்சி கூடம் மூடப்படுகின்றது.