கனடிய அரசாங்கத்திற்கு எதிராக முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
6 மில்லியன் டாலர் நட்ட ஈடு கோரி குறித்த ராணுவ அதிகாரி வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
மேஜர் ஜெனரல் ஜெனி ஃபாட்டின் என்ற அதிகாரியே இவ்வாறு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
குறித்த பாதுகாப்பு அதிகாரிக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரணைகளின் போது குறித்த அதிகாரி குற்றமற்றவர் என்பது நிரூபிக்கப்பட்டது.
குற்றச்சாட்டுகளில் இருந்து குறித்த அதிகாரி விடுவிக்கப்பட்டதனை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளதாக தெரிவித்து இதற்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் அரசாங்கமும் ஆறு மில்லியன் டாலர் நட்டையீடு செலுத்த வேண்டுமென ராணுவ உயர் அதிகாரி கோரிக்கை விடுத்துள்ளார்.