Home உலகம் கொரோனாவை வெற்றிகொள்ள முடியும் என ஐ.நா நம்பிக்கை

கொரோனாவை வெற்றிகொள்ள முடியும் என ஐ.நா நம்பிக்கை

by Jey

கொரோனாவுக்கு எதிரான போரில் உலகம் வெற்றிகொள்ளும் என எதிர்பார்ப்பதாகவும் கொரோனாவால் ஏற்படும் துயர் நீளும் என அஞ்சுகிறோம்’ எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் அன்டோனியா குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

ஐ.நா., சபையின் பொதுச் செயலர் அன்டோனியா குட்டரெஸ் தெரிவித்துள்ளதாவது:உலகம் முழுவதும் 16 கோடிக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்; இதுவரை 34 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். 50 கோடிக்கும் அதிகமானவர்கள் வேலையை இழந்துள்ளனர். துன்பத்திலிருந்தவர்கள் மேலும் துன்பத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். கொரோனாவால் ஏற்பட்டுள்ள துயர் நீளும் என அஞ்சுகிறோம்.

உலகம் முழுவதும் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பு மருந்துகள் பெரும் பங்கு ஆற்றி வருகின்றன. கொரோனா தடுப்பு மருந்தைப் பெருவாரியாகக் கொண்டு சென்ற இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகின்றன.

பணக்கார நாடுகள் தங்கள் பெரும்பான்மையான மக்களுக்குத் தடுப்பூசி போட்டு, அவர்களின் பொருளாதாரத்தைத் திறக்கும் சூழ்நிலையில் உள்ளன. அதே வேளையில் ஏழை நாடுகளில் கொரோனா தீவிரம் அதிகமாகி வருகிறது. கொரோனாவுக்கு எதிரான போரில் உலகம் உள்ளது. வல்லரசு நாடுகள் ஏழை நாடுகளுக்கு உதவ வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

related posts