வவுனியா – நெடுங்கேணிவெடுக்குநாறி மலைஆதிசிவன் ஆலயத்தில் விக்கிரகங்கள்உடைக்கப்பட்டமையைகண்டித்து யாழ்ப்பாணத்தில் சைவ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டம் நேற்று (27.03.2023) யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்துக்கு அருகில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தின் போது வெடுக்குநாறி எங்கள் சொத்து, வெடுக்குநாறியில் உடைத்த ஆதிலிங்கத்தை மீள பிரதிஸ்டை செய், வெடுக்குநாறியில் ஆதிலிங்கம் உடைக்கப்பட்டமையை கண்டிக்கிறோம் போன்ற கோஷங்கள் இதன்போது எழுப்பப்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் செயலூக்கத்துடன் கூடிய எதிர்ப்பை வெளிகாட்ட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.