Home இலங்கை பங்களாதேஷிடம் கடன் வாங்கும் இலங்கை

பங்களாதேஷிடம் கடன் வாங்கும் இலங்கை

by Jey

இலங்கைக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடனை வழங்குவதற்கு பங்களாதேஷ் மத்திய வங்கி அனுமதியளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Swap எனப்படும் நாணயப் பரிமாற்று முறையில் இந்த கடனை வழங்குவதற்கு பங்களாதேஷ் மத்திய வங்கியின் ஆளுநர் தலைமையில் நடைபெற்ற நாணய சபை கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் பங்களாதேஷ் அரசாங்கத்தின் அனுமதி கிடைக்கப்பெற்ற பின்னர் இதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கையின் அந்நிய செலாவணி செலவினங்களை ஈடுசெய்யும் வகையில் சலுகை வட்டி அடிப்படையில் இந்த கடன் தொகை வழங்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் பங்களாதேஷ் விஜயத்திற்கு பின்னர் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

related posts