எலோன் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தின் தற்போதைய பெறுமதி 20 பில்லியன் டொலர்கள் என தெரிவித்துள்ளார்.
பங்குரிமை இழப்பீட்டுத் திட்டமொன்று தொடர்பில், ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சல் ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டொலர்களுக்கு எலோன் மஸ்க் வாங்கியிருந்தார்.
டுவிட்டர் கடும் நிதி நெருக்கடிகளை எதிர்கொண்டதாக குறிப்பிட்டுள்ள இலோன் மஸ்க், ஒரு கட்டத்தில் இந்நிறுவனம் வங்குரோத்தாகும் அபாயத்தையும் எதிர்நோக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
டுவிட்டரை தான் வாங்கிய பின்னர், டுவிட்டரிலிருந்து வெளியேறிய விளம்பரதாரர்கள் தற்போது மீண்டும் வர ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை எலோன் மஸ்க் டுவிட்டரை வாங்கிய பின்னர் நிறுவன ஊழியர்களின் எண்ணிக்கை 7,500 இலிருந்து சுமார் 2,000 ஆக குறைத்தமை குறிப்பிடத்தக்கது.