Home இலங்கை கச்சத்தீவில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை

கச்சத்தீவில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை

by Jey

கச்சத்தீவில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாகவும் அங்கும் பௌத்த மயமாக்கல் இடம்பெறுவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

இதுதொடர்பில் கடற்படையின் ஊடகப்பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய அறிக்கையொன்றினையும் வெளியிட்டுள்ளார்.

கச்சத்தீவில் வேறு எந்த மத வழிபாட்டுத்தலமும் இல்லை எனவும், எதிர்காலத்தில் எந்த ஒரு விகாரையையும் கட்ட கடற்படை முயற்சி செய்யாதென உறுதிபடத் தெரிவிப்பதாக இலங்கை கடற்படை நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

கச்சத்தீவின் பாதுகாப்புக்காக முகாமிட்டுள்ள பௌத்த கடற்படையினர் தங்களின் வழிபாட்டுக்காக தங்களது முகாமுக்கு முன்பாக சிறிய புத்தர் சிலையை வைத்து வணங்கி வருகின்றனர்.

எனினும் கச்சத்தீவில் எந்த ஒரு விகாரையையும் கட்ட கடற்படை முயற்சி செய்யாதென்று உறுதிபடத் தெரிவிப்பதாக கடற்படை தெரிவித்துள்ளது.

‘‘யாழ். குடாநாட்டின் நிலப்பரப்பிலிருந்து சுமார் 50 கடல் மைல் தொலைவில் மக்கள் வசிக்காத தீவொன்றே கச்சதீவாகும். அப்பகுதியின் பாதுகாப்புக்காக கடற்படைக் குழுவொன்று அங்கு நிலைகொண்டுள்ளது.

அங்குள்ள பாதுகாப்பு கடமைகளுக்கு மேலதிகமாக, இலங்கை கடற்படையின் பௌத்த சங்கத்தின் பூரண பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தையும் அவர்கள் பாதுகாத்து வருகின்றனர்.

புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த பெருவிழாவைத்தவிர, இந்த தேவாலயம் தினமும் சுத்தம் செய்யப்பட்டு, விளக்குகள் ஏற்றப்பட்டு, மிகுந்த பக்தியுடன் அங்கு நிலைகொண்டுள்ள கடற்படையினர்களால் பராமரிக்கப்பட்டும் வருகிறது.

அங்கு நிலைகொண்டுள்ள கடற்படை அணியில் பணிபுரியும் கடற் படையினரில் பெரும்பான்மையானவர்கள் பௌத்தர்கள் என்பதால், அவர்களின் வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக, ஒரு சிறிய புத்தர் சிலை கடற்படையின் இல்லத்துக்கருகில் வைக்கப்பட்டு அவர்கள் வழிபாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

related posts