கடந்த சில நாட்களுக்கு முன் பூமியில் இருந்து சுமார் 4½ லட்சம் கி.மீ. தொலைவில் பயணம் செய்து வந்த ஹக்குட்டோ ஆர் விண்கலம் அடுத்த கட்ட பாதைக்கு அதாவது நிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைய திருப்பி விடப்பட்டது.
இதனை அடுத்து ஹக்குட்டோ ஆர் விண்கலம் தற்போது நிலவின் சுற்று வட்டப்பாதையை பாதுகாப்பாகவும், வெற்றிகரமாகவும் அடைந்துள்ளது.
பூமியை நிலவு வட்டமடிக்கும் சுற்று வட்டப்பாதையில் தற்போது ராஷித் ரோவருடன் ஹக்குட்டோ ஆர் விண்கலம் நுழைந்துள்ளதால் ஈர்ப்பு விசை காரணமாக நிலவை சுற்றி வருகிறது. இந்த நிலையில் அந்த ஹக்குட்டோ-ஆர் விண்கலம் நிலவை மிக நெருக்கமாக புகைபடம் எடுத்து அனுப்பி உள்ளது.
இதில் பக்கவாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் நிலவில் உள்ள மேடு, பள்ளங்கள் மிக துல்லியமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 2-வது கட்டமாக தாழ்வான வளிமண்டல அடுக்கில் பயணம் செய்ய உள்ளது. பின்னர், 3-வது கட்டமாக நிலவின் உள்ளே நுழைந்து தரையிறங்க உள்ளது