puffer வகை மீனைச் சாப்பிட்ட பின்னர் மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
83 வயதுடைய மூதாட்டியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும் அவருடன் இணைந்து அந்த மீனினை உட்கொண்ட அவரது கணவரும் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.
குறித்த தம்பதினர் puffer வகை மீனை முகப்புத்தகத்தின் மூலம் வாங்கியதுடன், இருவரும் முதன்முறையாக அந்த மீன் வகையை வாங்கி உண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மீனை உண்ட பின்னர் மூதாட்டிக்கு நடுங்க ஆரம்பித்ததோடு மூச்சுவிட முடியாமல் சிரமப்பட்டுள்ளதுடன், ஒரு மணித்தியாலத்திற்கு பிறகு அவரது கணவருக்கும் அதே பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது.
இருவரும் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதை தொடர்ந்து மூதாட்டி உயிரிழந்துள்ளதுடன் அவரது மரணம் puffer மீனின் நச்சுத்தன்மையால் ஏற்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.
puffer வகை மீனை உட்கொள்வதால் நோய் ஏற்படுவதுடன், மரணம் சம்பவிக்க நேரிடும் என்றும் அமெரிக்க உணவு, மருந்து நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.