அமெரிக்காவின் ஊடகவியலாளரை விடுதலை செய்யுமாறு கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கோரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் கனடிய பிரதமர் ஆகியோர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.
ரஷ்ய அதிகாரிகள் அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் என்னும் ஊடகத்தின் ஊடகவியலாளர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
உளவு பணியில் ஈடுபட்டதாக குற்றம் சுத்தி இந்த ஊடகவியலாளர் கைது செய்யப்பட்டிருந்தார்.
செய்தியாளர் Evan Gershkovich என்ற அமெரிக்க பிரஜையே இவ்வாறு கைது செய்யப்பட்டு இருந்தார்.
குறித்த ஊடகவியலாளரை விடுதலை செய்யுமாறு அமெரிக்க மற்றும் கனடிய அரச தலைவர்கள் கோரியுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் கனடிய பிரதமர் டுவிட் பதிவு ஒன்றையும் இட்டுள்ளார்.
உடனடியாக ஊடகவியலாளரை விடுதலை செய்யுமாறு கனடிய பிரதமர் கோரியுள்ளார்.