சிரிய தடுப்பு முகாமில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு கனடிய பெண்கள், போலீசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பயங்கரவாத குற்ற செயல்களின் அடிப்படையில் இந்த பெண்கள் சிரியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு சிரியாவின் தடுப்பு முகாம் ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட 14 கனடியர்கள் நாடு திரும்பியிருந்தனர்.
இவ்வாறு நாடு திரும்பிய கனடியர்களில் இரண்டு பெண்களை அதிகாரிகள் கைது செய்து உள்ளனர்.
இந்த பெண்களிடம் பயங்கரவாத செயல்பாடுகளில் ஈடுபடுவதனை தடுக்கும் வகையிலான உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிரியாவில் இருந்து நாடு திரும்பிய இந்த இரண்டு பெண்களையும் அதிகாரிகள் விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.
இந்த பெண்களிடம் விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறினும் இந்த பெண்களிடம் எவ்வித குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்களுக்கு குறிப்பிட்ட காலம் வரையில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பிணை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.