நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த வருடம் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பெற்றனர். திருமணமாகி சில மாதங்களிலேயே குழந்தை பெற்றது பெரிய சர்ச்சை ஆனது.
ஆனால் எங்களுக்கு 5 வருடத்திற்கு முன்பே பதிவு திருமணம் நடைபெற்று விட்டது என அவர்கள் விளக்கம் அளித்தனர்.
குழந்தைகளுக்கு உயிர் மற்றும் உலகம் என பெயரிட்டு இருப்பதாக விக்னேஷ் சிவன் ஏற்கனவே கூறி இருந்தார்.
குழந்தைகளின் பெயர்கள் வித்தியாசமாக இருப்பதாக ரசிகர்கள் பலரும் இணையத்தில் தெரிவித்து, தங்களது வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், நயன்தாரா-விக்னேஷ் ஜோடி பற்றிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அதில், கொட்டும் மழையில் நனைந்தபடி, வீடுகளற்று தெருவோரம் இருக்கும் ஏழை, எளியோர்களுக்கு உதவும் நோக்கில், அந்த ஜோடி சென்றுள்ளது.