நேச்சர் சஸ்டெயினபிளிட்டி என்ற செய்தி இதழில் இந்த புதிய ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன.
உலகம் முழுவதும் தண்ணீரால் மூன்றாம் உலக போர் ஏற்படும் என்று சில காலங்களுக்கு முன்பு வரை அறிஞர்கள் கூறி வந்தனர்.
எனினும், கோடை காலங்கள் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது சுட்டெரிக்கும் வெப்பம், தண்ணீர் பற்றாக்குறை ஆகியவையே.
அதிலும், இந்தியாவின் பல பகுதிகளில் காலி குடங்களுடன் நீரை தேடி மக்கள் மணிக்கணக்காக அலையும் காட்சிகளும் கிடைக்க பெறுகின்றன. இவற்றில் தமிழகமும் தப்புவதில்லை.
இந்த நிலையில், உலகம் முழுவதும் பணக்காரர்களின் பெரிய நீச்சல் குளங்கள், புல்வெளி தளங்கள் ஆகியவற்றால் நகரின் ஏழை மக்கள் அடிப்படை குடிநீர் வசதி இன்றி தவிக்கின்றனர் என புதிய ஆய்வு தெரிவிக்கின்றது.
இந்த ஆய்வில், சுவீடன், இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து நாடுகளை சேர்ந்த பல்கலை கழகங்களின் பேராசிரியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.