Home இந்தியா பிரதமர் மோடிக்கு கம்பீர தோற்றத்தை அளித்த கேமோ டி-சர்ட்

பிரதமர் மோடிக்கு கம்பீர தோற்றத்தை அளித்த கேமோ டி-சர்ட்

by Jey

முதுமலை பயணத்தின்போது பிரதமர் மோடிக்கு கம்பீர தோற்றத்தை அளித்த கேமோ டி-சர்ட் திருப்பூரில் தயாரானதாகும்.

இதனால் திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பிரதமர் மோடி கடந்த 9-ந் தேதி கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்துக்கு சென்று அங்கு வாகனம் மூலம் சவாரி மேற்கொண்டு இயற்கை அழகை ரசித்தார்.

வனவிலங்குகளையும் பைனாகுலர் மூலம் பார்வையிட்டார். புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தார்.

பின்னர் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு சென்ற பிரதமர், தாயில்லாத குட்டி யானைகளை பராமரித்த பாகன் தம்பதியான பொம்மன், பெள்ளியை சந்தித்து பாராட்டினார். அவர்களிடம் கலந்துரையாடினார்.

 

related posts