உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து ஓராண்டுக்கும் மேலான நிலையில், போர் முடிவுக்கு வராமல் தொடர்ந்து, நீடித்து வருகிறது.
பலரை பலி வாங்கிய இந்த போரில் உக்ரைன் நாட்டுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் செயல்பட்டு வருகின்றன.
ரஷியாவுக்கு எதிரான தடைகளை விதித்து வருகின்றன. உக்ரைனுக்கு வேண்டிய நிதி, ஆயுத உதவிகளையும் செய்து வருகின்றன.
எனினும், போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் பலனற்று காணப்படுகின்றன. இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவு மந்திரி அந்தோணி பிளிங்கன், உக்ரைனின் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபாவை தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.