தென்கொரியாவின் கங்வான் மாகாணம் கங்னியுங் நகரில் உள்ள காட்டுப்பகுதியில் நேற்று திடீரென தீப்பிடித்தது.
இந்த தீ சிறிது நேரத்தில் மளமளவென காட்டின் மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவியது.
இதனையடுத்து தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் 300-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் அங்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சியடித்தன. 6 ஹெலிகாப்டர்களும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
எனினும் தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. தீ அருகில் உள்ள கிராமங்களுக்கு பரவாமல் இருக்க குழிகளை தோண்டி தடுப்பு நடவடிக்கை ஏற்படுத்தி வருகின்றனர்.