Home இந்தியா துச்சேரியில் மீன்பிடித் தடைக்கால நிவாரணமாக ரூ.5500 அறிவிப்பு

துச்சேரியில் மீன்பிடித் தடைக்கால நிவாரணமாக ரூ.5500 அறிவிப்பு

by admin
புதுச்சேரியில் மீன்பிடித் தடைக்கால நிவாரண நிதியாக மீனவர்களுக்கு ரூ.5500 வழங்கப்படும் என மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
ஆண்டுதோறும்  ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை மீன்களின் இனப்பெருக்கக்காலம் என்பதால், இந்த நாள்களை மீன்பிடி தடைக்காலம் என மத்திய அரசு அறிவித்து கடந்த பல ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில் புதுச்சேரியில் மீன்பிடித் தடைக்கால நிவாரண நிதி வழங்குவது தொடர்பான அறிவிப்பை முதல்வர் ரங்கசாமி புதன்கிழமை அறிவித்தார். அதன்படி மீனவர்களுக்கு நிவாரணத் தொகையாக அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக ரூ.5500 செலுத்தப்படும் என தெரிவித்தார்.
இதன்மூலம் 15983 மீனவக் குடும்பங்களுக்கு ரூ.8.79 கோடி வழங்கப்பட உள்ளது

related posts