Home உலகம் எலிக் கட்டுப்பாட்டு இயக்குநர் பதவிக்காக விளம்பரம்

எலிக் கட்டுப்பாட்டு இயக்குநர் பதவிக்காக விளம்பரம்

by Jey

நியூயார்க்கில் எங்கு பார்த்தாலும் எலிகள் தான். அங்கு எலிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட மனிதர்களின் எண்ணிக்கைக்கு ஈடாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கட்டுக்கடங்காமல் பெருகிக்கொண்டு போகும் எலிப் பிரச்சினையைக் கையாள்வதற்கென முதல்முறையாக ஒருவர் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தான் எலிக் கட்டுப்பாட்டு இயக்குநர் என்ற அந்தப் பதவிக்காக விளம்பரம் செய்யப்பட்டது.

அதன்படி கழிவு நிர்வாக நிபுணரான கத்லீன் கொர்ரடிக்கு (Kathleen Corradi) ஆண்டுதோறும் 155,000 டாலர் சம்பளம் என்று New York Times கூறியுள்ளது.

எனினும் இந்த தகவல் உண்மையல்ல என உள்ளூர் புள்ளியியல் நிபுணர் ஒருவர் குறிப்பிட்டார். அதேவேளை நியூயார்க் நகரில் கடந்த சில ஆண்டுகளாக எலிகளின் எண்ணிக்கையைக் குறைக்க நகர அதிகாரிகள் பல மில்லியன் டாலர் செலவு செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

related posts