Home உலகம் அமெரிக்க ரஸ்ய தலைவர்களுக்கு இடையில் சந்திப்பு

அமெரிக்க ரஸ்ய தலைவர்களுக்கு இடையில் சந்திப்பு

by Jey

இரு நாடுகளுக்கு இடையேயான உறவை புதுப்பிப்பது தொடர்பாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ஜூன் 16ல், ஜெனீவாவில் சந்தித்து பேச உள்ளனர்.

ரஷ்யா, சீனா, ஈரான் மற்றும் வடகொரியா ஆகியவை, தங்கள் நாட்டின் பாதுகாப்பு எதிராக உள்ளதாக, அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது. கடந்தாண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், ரஷ்யா தலையிட்டதாகவும் புகார் கூறப்பட்டது. தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே பிரச்னைகள் இருந்து வருகின்றன.

 

இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்த, முந்தைய அமெரிக்க அதிபர்கள் பராக் ஒபாமா, டொனால்டு டிரம்ப் விருப்பம் தெரிவித்திருந்தனர். ஆனால் அதற்கான சூழ்நிலை உருவாகவில்லை.

இந்நிலையில், ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில், ஜூன், 16ல், ஜோ பைடன் மற்றும் விளாடிமிர் புடின் சந்தித்து பேச உள்ளதாக, வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின், இரு தலைவர்களும் முதல் முறையாக சந்தித்து பேச உள்ளனர்.

related posts