கனடாவில் பொத்துறை ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடக் கூடிய வாய்ப்பு காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவின் வருமான முகவர் நிறுவனம் உள்ளிட்ட 155000 பணியாளர்கள் போராட்டத்தில் இணைந்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினத்திற்குள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் போராட்டம் முன்னெடுக்கப்படும் என அறிவித்துள்ளது.
நான்கரைச் சதவீதமான சம்பள அதிகரிப்பு 4.5 வீதமாக வழங்கப்பட வேண்டுமென தொழிற்சங்கம் கோருகிறது.
எனினும், அரசாங்கம் சுமார் இரண்டு சதவீத சம்பள அதிகரிப்பை வழங்க இணங்கியுள்ளது.