யாழ்பாணத்தில் மாவட்டத்தில் தென்னை பயிற்செய்கை சபையின் யாழ். பிராந்திய முகாமையாளர் தே.வைகுந்தன் வெள்ளை ஈ தாக்கத்தினால் கிட்டத்தட்ட 5,000 தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (19.04.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, வடக்கு மாகாணத்தில் வெள்ளை ஈ தாக்கத்தினால் தென்னை மரங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றது.
இந்த வருடம் ஜனவரி மாதம் 15ஆம் திகதிக்குப் பின்னர் வடக்கு மாகாணத்தில் அதுவும் யாழ்.
நகரப் பகுதியில் வைத்தியசாலை வீதியில் வெள்ளை ஈ தாக்கம் கண்டுபிடிக்கப்பட்டு உடனடியாக அதனைக் கட்டுப்படுத்தும் செய்முறைகளைச் செயற்படுத்தினோம்.
ஆனாலும், அது பரவலடைந்து தற்பொழுது யாழ்ப்பாணம், நல்லூர், கோப்பாய் பிரதேச செயலர் பிரிவுகளிலும் பரவி உள்ளதாக அறியக் கிடைக்கின்றது.
தொடர்ச்சியாக இந்த வெள்ளை ஈ தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.
கிட்டத்தட்ட யாழில் 1,500 தென்னை மரங்களுக்கு இந்த கட்டுப்படுத்தல் செயற்திட்டத்தினை மேற்கொண்டுள்ளோம் எனினும் வெள்ளை ஈ தொடர்ச்சியாகப் பரவிக்கொண்டு செல்கின்றது, வெள்ளை என்பது ஒரு வெள்ளை இலையான் எனக் குறிப்பிடலாம்.