இலங்கையில் மக்களுக்கு இருதய நோய்கள் ஏற்படக்கூடிய சந்தர்ப்பம் அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அரசாங்க ஆயுர்வேத மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் சேனக கமகே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட திறந்த வெளியில் கடமையாற்றுவோர் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நாட்களில் அநேக பகுதிகளில் புத்தாண்டு விளையாட்டு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரையில் திறந்த வெளியில் போட்டிகளை நடத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இளநீர், தேய்காய் நீர் உள்ளிட்டவற்றை அதிகளவில் பருகுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.