ஒன்றாரியோவில் பெற்றோல் விலை அதிகரிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக றொரன்டோ பெரும்பாக பகுதியில் இவ்வாறு பெற்றோல் விலை உயர்வடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு லீற்றர் பெற்றோலின் விலை நாளைய தினம் பத்து சதங்களினால் உயர்வடையும் என தெரிவிக்கப்படுகின்றது.
ஒன்றாரியோவில் தற்பொழுது ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 156.5 சதங்கள் என்பதுடன், நாளைய தினம் ஒரு லீற்றரின் விலை 164.9 சதங்களாக உயர்வடையும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஐந்து மாதங்களின் பின்னர் இவ்வாறு பெற்றோலின் விலை உயர்வடைகின்றமை குறிப்பிடத்தக்கது.