தொழிற்சங்க போராட்டம் காரணமாக அசௌகரியங்கள் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடாவில் பொதுத்துறை ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க போராட்டம் காரணமாக சேவைகள் ஸ்தம்பிதம் அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மத்திய அரசாங்கத்தில் கடமையாற்றி வரும் பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பள அதிகரிப்பினை கோரி இவ்வாறு தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
வரி அளவீடு செய்யும் காலம் என்பதால் பொதுத்துறை ஊழியர்களின் தொழிற்சங்கப் போராட்டம் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பல்வேறு துறைகளில் இந்த தாக்கத்தை உணர நேரிடலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக எல்லைச் சேவை, குடிவரவு மற்றும் கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் தொடர்பான சேவைகள் என்பன இந்த தொழிற்சங்க போராட்டத்தினால் பாதிக்கப்பட கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் ஒரு லட்சத்து 55,000 பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.