முல்லைத்தீவிலுள்ள விவசாயிகளின் 12 ஏக்கர் காணி இதுவரை விடுவிக்கப்படாத நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து விவசாயிகள் முறையிட்டுள்ளனர்.
நேற்றைய தினம் (19.04.2023) கொடுக்கப்பட்டுள்ள இந்த முறைப்பாட்டில், முல்லைத்தீவு – ஊடையார் கட்டு தெற்கு கிராமத்தில் குளத்தின் கீழ்ப் பகுதியில் உள்ள 12 ஏக்கர் காணி நான்கு விவசாயிகளுக்குச் சொந்தமானது என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், மீள்குடியேற்றத்தின் பின்னர் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் விவசாய பண்ணையாகச் செய்கை பண்ணப்பட்டு வருகின்றது.
காணி உரிமையாளர்கள் பல தடவைகள் முறையிட்டும் ஆளுநர், மனித உரிமை ஆணைக்குழு மாவட்டச் செயலாளர் ஆகியோருக்கு முறையிட்டும் காணி விடுவிக்கச் சொல்லியும் இதுவரை காணி விடுவிக்கப்படவில்லை.