Home இந்தியா எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

by Jey

தூத்துக்குடி மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 27-ந் தேதி காலை 11.30 மணிக்கு எனது(மாவட்ட வருவாய் அலுவலர்) தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.

கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு சிலிண்டர் விநியோகஸ்தர்களும், மத்திய அரசின் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகளும் கலந்து கொள்ள உள்ளனர்.

எனவே எரிவாயு பயன்படுத்தும் நுகர்வோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு குறைகளை தெரிவிக்கலாம். நுகர்வோர் தங்களது குறைகளை மனுவாக தட்டச்சு செய்தோ அல்லது தெளிவாக எழுதியோ அன்றைய தினம் என்னிடம் நேரில் அளிக்கலாம்.

அப்போது, பொதுமக்களும், நுகர்வோர்களும் பெயர் மாற்றம், புதிய எரிவாயு உருளை வழங்குவதில் காலதாமதம், எரிவாயு விநியோகஸ்தர்களின் சேவையில் குறைபாடுகள், டெபாசிட் தொகை திரும்ப பெறல், புதிய இணைப்பு கோரியதன் நிலை, எரிவாயு உருளைகளுக்கான மானியம் உரிய வங்கி கணக்கில் உரிய காலத்தில் வரவு வைக்கப்படாதிருத்தல், எரிவாயு உருளையை விநியோகம் செய்யும் நபர்கள் மீது ஏதும் குறைபாடுகள் மற்றும் எரிவாயு பயன்படுத்தும் நுகர்வோரை பாதிக்கும் எந்த குறைகளையும் தெரிவித்து தீர்வு காணலாம்.

related posts