வடகொரிய ஏவுகணைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இராணுவத்திற்கு ஜப்பான் நாட்டின் அமைச்சர் யசுகஸு ஹமாடா உத்தரவிட்டுள்ளார்.
வடகொரிய ஏவுகணையை சுட்டு வீழ்த்துவதற்கு தயாராகுமாறு ஜப்பான் தனது இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
அந்நாட்டின் அமைச்சர் யசுகஸு ஹமாடா தற்காப்பு படைகளிடம், பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் பிறவற்றுக்கு எதிராக அழிவுகரமான நடவடிக்கைகளுக்கு உத்தரவிட வாய்ப்புள்ளது என பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாலிஸ்டிக் ஏவுகணை விழுந்தால் சேதத்தை குறைக்க தேவையான நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும் என அமைச்சர் ஹமாடா அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.