இலங்கையின் ஆளும் கூட்டணியின் 15 தலைவர்கள் ஆசியாவில் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், சீனாவுக்குச் சென்றுள்ளனர்.
நேற்றைய தினம் (23.04.2023) சென்றுள்ள இக்குழுவில் பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின் பேரில் இவர்கள் அங்கு சென்றுள்ளனர். இந்த வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
சீனாவுக்குச் சென்ற குழுவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சியின் ஐந்து உறுப்பினர்கள் உள்ளடங்குகின்றனர்.
10 உறுப்பினர்கள் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனயை சேர்ந்தவர்களாவர்.
மேலும், இந்த உறுப்பினர்களில் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சவின் உறவினரான நிபுண ரணவக்கவும் ஒருவராவார்.