டொரன்டோ மேயர் பதவிக்கான தேர்தலில் சுமார் 50 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர்.
டொரன்டோ நகரின் மேயராக கடமையாற்றி வந்த ஜோன் டோரி பதவியை விட்டு விலகியதனை அடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்காக இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக சுமார் 50 வேட்பாளர்கள் இதுவரையில் தங்களது பெயர்களை பதிவு செய்து கொண்டுள்ளனர்.
எதிர்வரும் மே மாதம் 12ஆம் தேதி வரையில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வேட்பாளர்களின் எண்ணிக்கை இம்முறை 90 முதல் 100 வரையில் காணப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
முன்னணி வேட்பாளர்கள் சிலர் இந்த தேர்தலில் களமிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் அக்டோபர் மாதம் மேயர் பதவிக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை மேயர் பதவி வெற்றிடத்திற்காக 18 வயதான இளைஞர் ஒருவரும் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.