Home உலகம் தடுப்பூசி ஏற்றியவர்கள் தென்கொரியாவில் முகக்கவசம் அணியத் தேவையில்லை

தடுப்பூசி ஏற்றியவர்கள் தென்கொரியாவில் முகக்கவசம் அணியத் தேவையில்லை

by Jey

தென்கொரியாவில் கொவிட் 19 தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணியத்தேவையில்லையென அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

அடுத்த மாதம் முதல் மக்கள் ஒன்றுக்கூடவும், வழிபாட்டு தளங்களுக்கு செல்லவும் அனுமதி வழங்கப்படுமென தென்கொரிய பிரதமர் கிம் பூ கியூம் அறிவித்துள்ளார்.

நாட்டில் 70 சதவீதத்திற்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி ஏற்றப்படும் பட்சத்தில் ஒக்டோபர் மாதத்திலிருந்து அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படவுள்ளன.

தென்கொரியாவில் தடுப்பூசி பெற்றுக்கொள்வதற்கென பொதுமக்களை ஊக்குவிக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

related posts