திருவண்ணாமலை நகர பா.ம.க. சார்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு சட்டத்தை தமிழக அரசு மே மாதம் 31-ந் தேதிக்குள் நிறைவேற்றக் கோரி தமிழக முதல்- அமைச்சருக்கும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தலைவருக்கும் தபால் மூலம் மனு அனுப்பும் போராட்டம் திருவண்ணாமலை தலைமை தபால் அலுவலகத்தில் நடைபெற்றது.
பா.ம.க. திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் ஏந்தல் ப.பக்தவச்சலம் தலைமை தாங்கினார். வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் நாராயசாமி, மாவட்டத் தலைவர் பெரியசாமி, பா.ம.க. நகர செயலாளர் உதயராகவன், தலைவர் ரவி, இளைஞர் அணி செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பா.ம.க. திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் ஏந்தல் ப.பக்தவச்சலம் தலைமை தாங்கினார். வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் நாராயசாமி, மாவட்டத் தலைவர் பெரியசாமி, பா.ம.க. நகர செயலாளர் உதயராகவன், தலைவர் ரவி, இளைஞர் அணி செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
இதற்கு ஐகோர்ட்டு தடை விதித்தது. பின்னர் சுப்ரீம் கோர்ட்டு வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என்று தீர்ப்பளித்தது.
கடந்த கல்வியாண்டிலேயே வன்னியர்கள் இடஒதுக்கீடு கிடைக்கவில்லை. 2023-24-ம் கல்வி ஆண்டிலாவது எங்களின் நியாயமான கோரிக்கையான 10.5 சதவீது இடஒதுக்கீடு கிடைக்க தமிழக அரசு வருகிற மே மாதம் 31-ந் தேதிக்குள் நிறைவேற்றி சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்றார்.