வடக்கு கிழக்கில் தமிழ் பேசுகின்ற மக்கள் அண்மைக்காலமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் பௌத்த சிங்கள மயமாக்களுக்கு எதிராக இன்று இப்படியாக தமது எதிர்ப்பை தெரிவிக்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று(25.04.2023)உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில்,“பல சமய வழிபாட்டு தளங்கள் தாக்கபட்டிருக்கின்றன. வணக்கத்துக்குரிய விக்கிரகங்கள், திரிசூலம் என்பன உடைத்து எறியப்பட்டுள்ளன. நிலங்கள் அபகரிக்கபடுகின்றன.
வெடுக்குநாறி மலை மத சின்னங்கள் அழிப்பு தொடர்பான வழக்கில் முன்னிலையாகும் சட்டத்தரணி என்ற வகையில் விடயமொன்றை கூற விரும்புகிறேன்.
தற்போது அங்குள்ள இந்து மத சின்னங்கள் அளிக்கப்பட்டுள்ளன. முன்னதாக, அங்கு வழிபாடுகளை தடுக்கும் முயற்சியில் தொல்பொருள் திணைக்களம் ஈடுபட்டது.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அதற்கு எதிராக பல வழக்குகளும் தொடரப்பட்டன. எனினும், அவர்களால் அதனை தடுக்க முடியவில்லை.
தற்போது, ஜீப்களில், கட்டை காற்சட்டை அணிந்துவந்த அடையாளம் தெரியாத மத சின்னங்கள் தாக்கியளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.”என தெரிவித்துள்ளார்.