டெல்லியில் பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று கூறும்போது, ஆம் ஆத்மி கட்சியை தலைமையேற்று செல்லும் கெஜ்ரிவால், நேர்மை மற்றும் எளிமை ஆகியவற்றை ஊக்குவிப்பேன் என அரசியலில் நுழையும்போது அளித்த தனது வாக்குறுதிக்கு துரோகம் இழைத்து விட்டார் என குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர் தன்னிடம் உள்ள ஆவணங்கள் அடிப்படையில் கூறும்போது, கெஜ்ரிவாலின் இல்லம் வியட்நாம் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட மார்பிள் கற்கள், லட்சக்கணக்கான மதிப்பிலான திரை சீலைகள் மற்றும் முன்பே வடிவமைக்கப்பட்ட மர சுவர்கள் ஆகியவற்றை கொண்டு அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது.
ஒரேயொரு திரை சீலை மட்டுமே ரூ.7.94 லட்சத்திற்கு கூடுதலான விலை பெறும். இதுவே வெட்கமில்லாத அரசரின் கதை என கூறியுள்ளார்.