Home கனடா ஒன்றாரியோவில் பொலிஸ் உத்தியோகத்தர் எண்ணிக்கை அதிகரக்கப்பட உள்ளது

ஒன்றாரியோவில் பொலிஸ் உத்தியோகத்தர் எண்ணிக்கை அதிகரக்கப்பட உள்ளது

by Jey

ஒன்றரியோ மாகாணத்தில் போலீஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என மாகாண முதல்வர் டக் போர்டு தெரிவித்துள்ளார்.

போலீஸ் கல்லூரிகளில் வழங்கப்படும் பயிற்சி மேலும் விஸ்தரிக்கப்பட உள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.

இட்டோபிக்காக்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.

போலீஸ் உத்தியோகத்தர் பதவிக்காக தகுதிகளை குறைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுவரை காலமும் இரண்டாம் நிலை கல்விக்கு மேற்பட்ட தகுதியுடையவர்களை பொலிஸ் உத்தியோகத்தர் பதவிக்காக விண்ணப்பம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் எதிர்வரும் காலங்களில் இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளதாக முதல்வர் போர்ட் தெரிவித்துள்ளார்.

மேலும் போலீஸ் பயிற்சி கல்லூரியில் அறவீடு செய்யப்படும் கட்டணங்களை ரத்து செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நபர் ஒருவருக்கு பயிற்சி வழங்குவதற்காக சுமார் 15,000 டாலர்கள் தேவைப்படும் என தெரிவிக்கப்படுகிறது இந்த ஆண்டில் 140 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் எனவும் அடுத்த ஆண்டு இந்த எண்ணிக்கை 470 ஆக உயர்த்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மாகாணத்தில் கூடுதல் எண்ணிக்கையில் காவல்துறையினரை கடமையில் ஈடுபடுத்த தாம் உத்தேசித்துள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.

related posts