சூடானில் நிர்கதியாகியுள்ள கனடிய பிரஜைகளை மீட்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
வான் வழியாகவும் கடல் வழியாகவும் இந்த மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
மீட்புப் பணிகளுக்கு இரண்டு கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சூடானில் ராணுவ படையினருக்கும் துணை இராணுவ குழுவிற்கு இடையில் உக்கிர மோதல்கள் இடம் பெற்றே வரும் நிலையில் தற்பொழுது மோதல் தவிர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்துடன் இந்த மோதல் தவிர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட காலத்தில் சூடானில் தங்கியுள்ள பெரும் எண்ணிக்கையிலான வெளிநாட்டு பிரதிநிதிகளை மீட்கும் பணியில் அந்தந்த நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன.
பல்வேறு நாடுகள் ஏற்கனவே தமது நாட்டு பிரஜைகளை மீட்க தொடங்கியுள்ளன அந்த வகையில் கனடாவும் மீட்பு பணிகளை முன்னெடுக்க உள்ளதாகவும் நேரடியாக விமானம் மூலமாக மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
சூடானுக்கு அருகாமையில் உள்ள நாடுகளில் விமானங்களை தரையிறக்குவதில் சிக்கல்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.