Home கனடா வரி ஆவணங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்குமாறு கோரிக்கை

வரி ஆவணங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்குமாறு கோரிக்கை

by Jey

கனடாவில் வரி ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கான கால எல்லையை நீடிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது நாட்டில் அரசாங்க ஊழியர்கள் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கனடாவின் பிரதான அரச தரப்பு தொழிற்சங்கம் ஒன்றிணைந்து இந்த பாரிய வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றது.

சுமார் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பணியாளர்களுள் தன்னுடைய வருமான முகவர் நிறுவனத்தைச் சேர்ந்த 39000 பணியாளர்களும் உள்ளடங்குகின்றனர்.

வரி ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதி திகதியாக மே மாதம் முதலாம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த கால அவகாசம் நீடிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் கனடாவின் பிரதான அரச தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் காரணமாக வரி ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கு கால அவகாசம் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான மகஜர் ஒன்று தற்பொழுது கையொப்பமிடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த மகஜரில் தற்பொழுது சுமார் 25 ஆயிரம் கையொப்பங்கள் திரட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வேலைநிறுத்த போராட்டம் காரணமாக வருமான முகவர் நிறுவனத்தில் தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் அளிக்கப்படுவதில்லை எனவும் பல்வேறு வரி செலுத்துபவர்கள் தங்களது சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ள முடியாத ஓர் நிலைமை காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே வரி ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை ஜூன் மாதம் 15-ம் தேதி வரையில் நீட்டிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

related posts