ட்ரோன்கள் மூலம் கனடாவில் சிறைச்சாலைகளுக்கு போதைப் பொருள் கடத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பிரிட்டிஸ் கொலம்பியாவின் சிறைச்சாலை ஒன்றுக்கு இவ்வாறு போதைப் பொருள் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த போதைப் பொருளை உட்கொண்ட ஒரு கைதி உயிரிழந்ததுடன் பலர் நோய்வாய்ப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
போதைப் பொருட்கள், துப்பாக்கிகள், கையடக்க தொலைபேசிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் ட்ரோன்கள் ஊடாக சிறைச்சாலைக்குள் கொண்டு செல்லப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.