Home இலங்கை மூன்று மாவட்டங்களில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் ஆரம்பம்

மூன்று மாவட்டங்களில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் ஆரம்பம்

by Jey

மேல் மாகாணம் தவிர்ந்த நாட்டின் மேலும் மூன்று மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காலி, மாத்தறை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் இன்று(27) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதற்கான அறிவுறுத்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வழங்கியுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா கூறியுள்ளார்.

குறித்த மூன்று மாவட்டங்களிலும், தெரிவுசெய்யப்பட்ட பிரதேசங்களில் வசிக்கின்ற மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

related posts