Home உலகம் பதிவுகள் மூலம் பணம் சம்பாதிப்பதற்கான புதிய வழி அறிமுகம்

பதிவுகள் மூலம் பணம் சம்பாதிப்பதற்கான புதிய வழி அறிமுகம்

by Jey

டுவிட்டர் நிறுவனத்தின் பொறுப்பேற்ற எலான் மஸ்க் கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகிறார்.

இந்நிலையில் அடுத்த மாதம் முதல் செய்தி நிறுவனங்கள் டுவிட்டரில் தங்கள் செய்திக் கட்டுரைகளைப் படிக்க பயனர்களிடம் கட்டணம் வசூலிக்கும் வசதி அறிமுகம் செய்யப்படும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “அடுத்த மாதம் முதல் டுவிட்டர் தளம் செய்தி நிறுவனங்கள் ஒவ்வொரு கட்டுரைக்கும் பயனர்களிடம் ஒரே கிளிக்கில் கட்டணம் வசூலிக்க அனுமதிக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், “மாதாந்திர சந்தாவிற்கு பதிவு செய்யாத பயனர்கள் அவ்வப்போது கட்டுரையைப் படிக்க விரும்பும்போது அந்த ஒரு கட்டுரைக்கு அதிக விலையை செலுத்த வேண்டும்.

இது செய்தி நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் இருவருக்கும் பயன் அளிப்பதாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பல செய்தி நிறுவனங்கள் தங்கள் இணையதளங்களை சந்தா கட்டணம் செலுத்திய பின் வாசிக்கும் வகையில் வடிவமைத்துள்ளதால், டுவிட்டரின் புதிய கட்டணத் திட்டம் பற்றி பயனர்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, டுவிட்டரில் அனைவரும் தங்கள் பதிவுகள் மூலம் பணம் சம்பாதிப்பதற்கான வழி அறிமுகப்படுத்தப்படும் எனக் கூறி இருந்த நிறையில், எலான் மஸ்க் இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

related posts