Home உலகம் பூமியிலிருந்து விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதல் தொலைநோக்கி

பூமியிலிருந்து விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதல் தொலைநோக்கி

by Jey

ஹபிள் தொலைநோக்கி பூமியின் சுற்றுவட்டப் பாதையில் செலுத்தப்பட்டு 33 வருடங்கள் கொண்டாடும் வகையில் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த புகைப்படம் தற்போது இணையத்தையில் வைரலாகி வருகின்றது.

அப்பிள் தொலைசோக்கி தொடர்பில் நாசா நிறுவனம் தற்போது பல தகவல்களை வெளியிட்ட வருகின்றது. அதனடிப்படையில், ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி 1990ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது.

பூமியிலிருந்து விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதல் தொலைநோக்கி இதுவாகும். ஹபிள் தொலைநோக்கி ஒரு பேருந்தின் அளவை உடையது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், 97 நிமிடத்துக்கு ஒருமுறை பூமியை ஹபிள் சுற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இதன் அகச்சிவப்பு கதிர், புற ஊதா கதிர், காணுறு ஒளி ஆகிய மூன்று அலைநீளங்களில் நிறமாலைமானி மற்றும் காட்சி செய்யும் திறன் கொண்டது.

0.05 வினாடி டிகிரி விலகியுள்ள பொருட்களைக்கூட பிரித்து இனம் காணும் காட்சித் திறன் கொண்டது.

குறித்த ஹபிள் தொலை நோக்கியை பூமியின் சுற்றுவட்ட பாதையில் செலுத்தி 33 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து ஹபிள் எடுத்த புதிய புகைப்படத்தையே தற்போது நாசா வெளியிட்டுள்ளது.

ஹபிள் இம்முறை ‘NGC 1333’ என்ற விண்வெளி பகுதியை படம்பிடித்து அனுப்பியுள்ளது. ‘NGC 1333’ என்பது நட்சத்திரங்கள் உருவாகும் பகுதியாகும்.

இவை பெகாசஸ் விண்மீன் தொகுப்பில் உள்ள ஒரு பிரதிபலிப்பு நெபுலா ஆகும். இது பூமியிலிருந்து சுமார் 960 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

related posts