பிரதமர் மோடி பங்கேற்ற 100-வது மன் கி பாத் நிகழ்ச்சி இன்று காலை 11 மணியளவில் தொடங்கி நிறைவடைந்து உள்ளது.
இந்த நிகழ்ச்சியை இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஒலிபரப்ப பா.ஜ.க. முழு அளவில் ஏற்பாடுகளை செய்திருந்தது.
இந்த நிகழ்ச்சியை மக்கள் கேட்பதற்காக நாடு முழுவதும் 4 லட்சம் இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்த 100-வது மன் கி பாத் நிகழ்ச்சியானது ஐ.நா. சபையின் தலைமையகத்திலும் நேரலையாக ஒலிபரப்பு செய்யப்பட்டு உள்ளது.
இங்கிலாந்தில் லண்டன் நகரில் மத்திய மந்திரி ஜிதேந்திரா சிங் உள்பட, அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில் மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் உள்பட, நியூசிலாந்தின் ஆக்லாந்து நகர் என பல்வேறு இடங்களிலும் 100-வது மன் கி பாத் நிகழ்ச்சியை காண ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக இந்திய வம்சாவளி மக்கள் திரண்டிருந்தனர்.
இந்நிகழ்ச்சி முடிந்து வெளியே வரும்போது, திரைப்பட பின்னணி பாடகியான அனுராதா பட்வால் மும்பையில் செய்தியாளர்களிடம் கூறும்போது, இது ஒரு தனித்துவ திட்ட தொடக்க நிகழ்ச்சியாகும்.
நாட்டில் உள்ள சில நல்ல விசயங்களை செய்யும் ஒவ்வொருவரை பற்றியும் பிரதமர் மோடி அறிந்து வைத்திருக்கிறார். பின்னர் அவர்களை தொடர்பு கொண்டு பேசுகிறார்.