சூர்யாவை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக இருக்கும் நடிகை ஜோதிகா தனது ரசிகர்களின் தொடர்ச்சி மற்றும் திரைப்பட மார்க்கெட்டை அப்படியே வைத்திருக்கும் ஒரு நடிகை என்றே கூறலாம்.
கடந்த 2015 ஆம் ஆண்டு ’36 வயதினிலே’ படத்தின் மூலம் பெரிய திரைக்கு ரீ-என்ட்ரி கொடுத்த நிலையில், அவர் தொடர்ச்சியாக பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
ஜோதிகாவும் சூர்யாவும் சமீபத்தில் மும்பையில் ஒரு புதிய வீட்டை அமைத்து தங்கள் குழந்தைகளான தேவ் மற்றும் தியா ஆகியோரின் கல்விக்காக அங்கு சென்றார்கள்.
இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஜோதிகா அடிக்கடி புகைப்படங்களையும். வீடியோக்களையும் வெளியீட்டு வருகிறார்.