கனடாவில் கைதிகள் அல்லது சந்தேக நபர்களுக்கு பிணை வழங்குவது தொடர்பில் சர்ச்சை நிலைமை தொடர்ந்தும் நீடித்து வருகின்றது.
கனடாவில் இடம்பெறும் குற்றச் செயல்கள் மற்றும் காவல்துறையினர் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு பிணை நடைமுறையில் காணப்படும் சட்டக் குறைபாடுகளே காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மாகாண முதல்வர்களினால் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, பிணை வழங்குதல் குறித்த நடைமுறைகளில் மாற்றம் செய்யப்படும் என கனடிய நீதி அமைச்சர் டேவிட் லமாட்டி ( னுயஎனை டுயஅநவவi ) தெரிவித்துள்ளார்.
இந்த வசந்த காலத்தில் பிணை நடைமுறை குறித்த திருத்தங்கள் அறிமுகம் செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டத் திருத்தங்களை துரித கதியில் மேற்ககொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், அண்மையில் இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்களுக்கும் சட்டத் திருத்தங்களுக்கும் தொடர்பு கிடையாது என நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.