முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க எச்1பி விசா வழங்கும் முறையை நவீன மயமாக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
வெவ்வேறு நாடுகளில் இருக்கும் திறமையான பணியாளர்கள் தங்கள் நாட்டில் வந்து பணிபுரிவதற்காக அமெரிக்காவில் எச்1பி வகை விசா வழங்கப்படுகிறது.
இந்த விசாவை வாங்கிய 6 ஆண்டுகள் கழித்து நிரந்தர குடியுரிமை அல்லது கிரீன் கார்டு பெற முடியும்.
இதன் காரணமாக எச்1பி வகை விசாவை பெற பலத்த போட்டி உள்ளது.
இந்த நிலையில் எச்1பி விசா வழங்குவதில் சில நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்க அரசுக்கு தொடர்ந்து புகார்கள் சென்றது.
எனவே இந்த விசாவை வழங்கும் முறையை நவீன மயமாக்க அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படி இந்த எச்1பி விசாக்கள் 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். தேவைப்பட்டால் மேலும் 3 ஆண்டுகளுக்கு இதனை நீட்டிக்கலாம்.
இது போல மேலும் பல புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்த அமெரிக்கா முடிவெடுத்துள்ளது.